விரைவாக கோப்புகளை காப்பி செய்ய என்ற பதிவில் Teracopy என்ற மென்பொருளை பற்றி பதிவிட்டு உள்ளேன். இதே போல் உள்ள மற்றொரு சிறப்பான மென்பொருளை பற்றி பார்ப்போம்.
ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் .
![]()
SuperCopier என்னும் இந்த மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக
செய்கிறது . இதற்க்கு இந்த மென்பொருளை நிறுவி இயக்கி விட்டாலே போதும். நீங்கள் கோப்புகளை copy செய்யும் பொது தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.
மேலும் இதில் உள்ள வசதிகள்
- Copy செய்வதை Pause செய்து கொண்டு பின்னர் மீண்டும் நிறுத்தியதில் இருந்து தொடரலாம்.
- பல கோப்புகள் இருக்கும் போல்டர் copy செய்யும் போது சில கோப்புகளை copy செய்ய வேண்டாமெனில் skip என்ற வசதி மூலம் தேவை இல்லாத கோப்புகள் copy செய்வதை தடுக்கலாம்.
டவுன்லோட் செய்ய :
BrowseALL – Lucky Limat | SuperCopier – A Powerful File Copier


