ஏற்கனவே Screen Shots எடுக்க உதவும் மென்பொருள் பற்றி அண்மையில் இந்த பதிவை Screenshot எடுக்க சிறந்த மென்பொருள் எழுதினேன். ஏற்கனவே எழுதிய அந்த மென்பொருள் கடினமாக இருக்கிறது என்றால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.மிக எளிமையாக உள்ளது. இந்த மென்பொருளிலும் முழுத்திரை,குறிப்பிட்ட திரை,திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மௌஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.
நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.

மேலும் keyboardல் உள்ள Prt Scr பட்டனை பயன்படுத்தி எளிமையாக கையாள முடியும்.உதாரணமாக Prt Scr பட்டனை மட்டும் அழுத்தினால் திரையில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க முடியும்.

மேலும் Preferences என்பதை கிளிக் செய்து உங்கள் வசதிக்கேற்ப தேவையானவற்றை மாற்றி கொள்ளலாம்.


Screen Shot எடுத்த பின் மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம்.உதாரணமாக வார்த்தைகள் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம். இதனை இயக்குவது எளிதாக இருப்பதால் தற்போது இதனையே நான் பயன்படுத்தி வருகிறேன்.இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்க.
BrowseAll - Lucky Limat | Greenshot - a free screenshot tool



