-----------------------------------------

www.ymrpctips.com

Sunday, October 30, 2011

ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக உபயோகிக்க - Free Online Photoshop editor


போட்டோக்களை எடிட் செய்யும் மென்பொருட்களில் அடோப் நிறுவனம் வழங்கும் போட்டோஷாப் மென்பொருள் தான் எப்பவுமே நம்பர் 1. பல மென்பொருட்கள் இருந்தாலும் இந்த போட்டோஷாப் மென்பொருளுக்கு ஈடாக எதுவும் போட்டி போட முடியவில்லை. பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கின்றனர். ஆனால் இந்த போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான் உபயோகிக்க முடியும். ஆனால் ஆன்லைனில் இந்த மென்பொருளை இலவசமாக
உபயோகிக்க ஒரு அருமையான தளம் உள்ளது.

இந்த ஆன்லைன் எடிட்டரில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள பல எண்ணற்ற வசதிகளும் உள்ளது. உபயோகிப்பதும் போட்டோஷாப் போன்றே உள்ளது. போட்டோக்களை facebook, picasa, flickr போன்ற தளங்களில் இருந்து நேரடியாக அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. 


போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்க இயலாதவர்களுக்கு இந்த தளம் மிகப்பெரிய பரிசாகும். இனி போட்டோஷாப் மென்பொருள் இல்லையே என்ற கவலை இல்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மென்பொருளை உபயோகித்து கொள்ளலாம். 

இந்த தளத்திற்கு செல்ல - http://pixlr.com/editor/