பயன்கள்:
- இதற்க்காக நீங்கள் எந்த மென்பொருளும் கணினியில் இணைக்க வேண்டியதில்லை.
- தினமும் உபயோகப்படுத்தும் மென்பொருட்களுக்கு செட் செய்து விட்டால் மவுஸ் பயன்படுத்தாமல் Short Cut key கொடுத்தாலே ஓபன் ஆகி விடும்.
- இந்த வசதியை உருவாக்க பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவும் பெற்றிருக்க தேவையில்லை சுலபமாக செய்து விடலாம்.
Shortcut Key உருவாக்கும் முறை:
- நீங்கள் shortcut Key உருவாக்க நினைக்கும் மென்பொருள் மீது வலது கிளிக் செய்து Properties கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Shortcut tab தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அந்த டேபில் Shortcut Key என்ற பகுதியில் None என்று இருக்கும் அதில் கிளிக் செய்து ஏதாவது ஒரு லெட்டரை அழுத்துங்கள்.
உதாரணமாக 1 அழுத்தினால் உங்களுடைய shortcut key Ctrl+Alt+1 என வரும். A அழுத்தினால் Ctrl+Alt+A என வரும் இப்படி உங்களுக்கு தேவையான கீயை செட் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு தேவையான கீயை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Apply- Ok கொடுத்து விடுங்கள்.
- அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் உருவாக்கிய shortcut key அழுத்துங்கள் அந்த மென்பொருள் உடனே ஓபன் ஆகிவிடும்.
- இப்படி பல மென்பொருட்களுக்கு நீங்கள் கீயை உருவாக்கி கொள்ளலாம்.