-----------------------------------------

www.ymrpctips.com

Sunday, September 11, 2011

ட்ரைவர் அப்டேட்


விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய ஏற்கனவே என்னுடைய வலைப்பூவிலேயே இரண்டு மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மற்றுமொரு ட்ரைவர் அப்டேட் மென்பொருள் உங்களுக்காக Smart Driver Updater இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக்கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.


பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பேக்அப் செய்து கொள்ளவும் முடியும்.


இந்த மென்பொருள் மூலம் பேக்அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.