-----------------------------------------

www.ymrpctips.com

Saturday, September 10, 2011

உங்களின் புதிய போட்டோக்களை ஒரே நிமிடத்தில் பழைய கால போட்டோவாக மாற்றலாம்



வளர்ந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தில் போட்டோக்களை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்த முறையில் நாம் நமக்கு தேவையான போட்டோக்கள எடுத்து மகிழ்கிறோம். ஆனால் வீட்டில் நம் பாட்டி அல்லது தாத்தாவின் போட்டோக்கள் இருப்பதை பார்த்து இருப்போம் அந்த போட்டோக்கள் தெளிவற்றும் கலர் இழந்தும் காணப்படும். இதை போன்று நம் நவீன டிஜிட்டல் படங்களையும் எப்படி இந்த படங்கள் போல மாற்றலாம் என்று பார்ப்போம்.
இது என் மகளின் புதிய போட்டோ 
மாற்றிய பின் 
  • இது போல மாற்ற போட்டோஷாப் போன்ற மென்பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஒரே நிமிடத்தில் தேவையான படத்தை மாற்றி கொள்ளலாம்.
  • இதற்கு முதலில் இந்த Your Old Picture தளம் சென்று உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Uplod பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் படம் பழைய படமாக மாறி விடும். 
  • மாறிய படத்தை அங்கிருந்தே சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
  • உங்கள் படங்களையும் இதுபோல் மாற்றி மகிழுங்கள்.