-----------------------------------------

www.ymrpctips.com

Saturday, September 10, 2011

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க



பேஸ்புக் என்னும் சமூக வலைத்தளத்தில் நாம் அனைவரும் பதிந்து நம் நட்பு வட்டத்தை மேலும் விரிவு படுத்தி உள்ளோம். புதிய நண்பர்களை உருவாக்க இந்த பேஸ்புக் தளம் மிகவும் பயன்படுகிறது. இப்படி நாம் உருவாக்கிய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும் வகையில் இருக்கும் இதனை எப்படி மாற்றுவது நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து எப்படி மறைப்பது என இங்கு பார்க்கலாம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் கணக்கு பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள் என்பதை தேர்வு செய்யவும். 

  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Connecting On Facebook பகுதியில் உள்ள View Setting என்பதை க்ளிக் seyyungal


  • உங்கள் நண்பர்கள் பட்டியலை பார்க்க என்ற பகுதியில் உள்ள டேபை க்ளிக் செய்து அதில் உள்ள Customize என்பதை க்ளிக் செய்யுங்கள். 

  • உங்களுக்கு வேறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.


நண்பர்களின் நண்பர்கள்: இதனை தேர்வு செய்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்ட் உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாது அவரின் நண்பர்களுக்கும் தெரியும்.

நண்பர்கள்  : இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பகுதி தெரியும். 

நான் மட்டும்: இந்த வசதியை தேர்வு செய்தால் உங்களை தவிர வேறு எவரும் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் பகுதியை காண இயலாது.


குறிப்பிட்ட நபர்கள்: இந்த வசதியானது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை காண்பிக்கலாம்.இதை தேர்வு செய்து வரும் கட்டத்தில் அவர்களின் பேரை குறிப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் நாம் காண்பிக்கலாம். 

இந்த விண்ணப்பத்தை மறைக்கவும்: என்ற பகுதியில் நீங்கள் இந்த நண்பர்கள் லிஸ்ட்டை மறைக்க விரும்பும் நபர்களை தனித்தனியே தேர்வு செய்து கொள்ளலாம்.